18 ஆண்டுகளுக்கு பின்பு காணப்படும் சனியின் சந்திரகிரகமானது இன்று காணப்படும் என்று கூறப்படுகின்றது.
இந்த வானியல் நிகழ்விற்கு சனியின் சந்திர மறைவு என்று பெயரிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வெறும் கண்களால் காணக்கூடிய இந்நிகழ்வானது 24 மற்றும் 25திகதி நள்ளிரவில் இந்தியாவில் காணப்படும். 18 ஆண்டுகளுக்கு பின்பு இந்த அரிய வானியல் காட்சியினைக் காணலாம்.இந்த நேரத்தில் சனி சந்திரனுக்கு பின்னால் மறைந்திருமெனவும் சனியின் வளையங்கள் சந்திரனின் விளிம்பில் தெரியுமெனவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை இன்று அதிகாலை 2.10 மணி வரை இலங்கை வானில் காண முடியும் என ஆர்தர் சி கிளார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரனை நெருங்கி மறையும் சனிக்கிரகம் மீண்டும் அதிகாலை 2.20 மணிக்கு காட்சியளிக்குமெனவும் கூறப்படுகிறது.