Home இலங்கை குளவி கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவன் பலி

குளவி கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவன் பலி

0
குளவி கொட்டுக்கு இலக்காகி பாடசாலை மாணவன் பலி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட எட்டு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, ஒரு பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக கம்பளை, புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.புஸ்ஸல்லாவ பிளக்ஃபொரஸ்ட் தோட்டத்தில் வசித்து வந்த சஸ்மிதன் திருச்செல்வம் என்ற மாணவனே சம்பவத்தில் உயிரிழந்தார்.அவர் புஸ்ஸல்லாவ இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவில் மூன்றாம் தரத்தில் கல்வி பயின்று வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.சிறுவனின் தாய், தந்தை மற்றும் சகோதரர் உட்பட எட்டு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, அவர்களில் ஆறு பேர் கம்பளை மற்றும் வஹுகபிட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் சஸ்மிதனின் சகோதரர் தாஸ்மிதனுடன் பாடசாலை முடிந்து தங்கள் தந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கம்பளை-நுவரெலியா பிரதான வீதியில் உள்ள அவர்களின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு பெரிய மரத்தில் சுமார் ஆறு குளவி கூடுகள் கட்டப்பட்டிருந்த நிலையில், அதன் ஒரு கூட்டில் ஈக்கள் கிளறிவிட்டதன் காரணமாக இந்த குளவி கொட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.தங்கள் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற இந்த தாக்குதலால் அவர்கள் மூவரும் அலறியடித்து ஓடியபோது, ​​அவர்களின் அலறல் சத்தங்களைக் கேட்டு வந்த தாய் உள்ளிட்ட அவரது உறவினர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகினர்.பின்னர், அயலவர்கள் குளவிகளை விரட்ட தீ வைத்து அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கம்பளை மருத்துவமனை மரண விசாரணை அதிகாரி நளின் ஏ. மெதிவக்க சம்பவ இடத்தை கண்காணித்ததுடன், மாணவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.சம்பவம் குறித்து புஸ்ஸல்லாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version