காலி, கொஸ்கொட பகுதியில் இன்று (31) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெரியாத நபர்களால் T56 துப்பாக்கியால் சுடப்பட்டு, 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.