Home இலங்கை சோதனைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிக்கு காத்திருந்த ஆபத்து

சோதனைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிக்கு காத்திருந்த ஆபத்து

0
சோதனைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிக்கு காத்திருந்த ஆபத்து

மீகஹகிவுல – அக்கலஉல்பத கிராமத்திற்கு மேலே உள்ள அடர்ந்த காட்டில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி செய்த இடமொன்றை இன்று (26) பிற்பகல் சோதனை செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர், விலங்குக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி மீகஹகிவுல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகெட்டிய பொலிஸாருடன் இணைந்த அதிகாரிகள் குழு இந்த சோதனை மேற்கொண்டிருந்ததோடு, அங்கு இருந்த ஒரு பொலிஸ் அதிகாரி இந்த விபத்தை எதிர்கொண்டார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 36 வயதுடையவர் ஆவார்.
சோதனை நடத்த அங்கு சென்ற அதிகாரிகள் காட்டில் இருந்து துப்பாக்கிச் சத்தத்தை கேட்டதுடன், தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட போது, ​​அந்த அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பது தெரியவந்தது.
அதன்படி, விரைந்து வந்த ஏனைய அதிகாரிகள், ஆபத்தான நிலையில் இருந்த பொலிஸ் அதிகாரியை, அடர்ந்த காட்டின் வழியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் தூக்கிச்சென்று, பிரதான வீதியில் வைத்து 1990 அம்பியூலன்ஸ் சேவையின் உதவியுடன் மீகஹகிவுல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.துப்பாக்கிச் சூட்டின் காரணமாக, பொலிஸ் அதிகாரியின் வயிறு மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version