சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த பந்தில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரிட் பும்ரா படைத்துள்ளார்.குறித்த பட்டியலில் வக்கார் யூனிஸ் முதலாவது இடத்திலும், டேல் ஸ்டெய்ன் இரண்டாவது இடத்திலும் உள்ளதுடன் ககிசோ ரபாடா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.வக்கார் யூனிஸ் 7,725 பந்துகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், டேல் ஸ்டெய்ன் 7,848 பந்துகளிலும், ககிசோ ரபாடா 8,153 பந்துகளிலும் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.