Home » தங்கம் வாங்குவது போல் நடித்து ரூ.4 இலட்சம் நகை திருட்டு! – அவிசாவளையில் தம்பதியினர் கைது

தங்கம் வாங்குவது போல் நடித்து ரூ.4 இலட்சம் நகை திருட்டு! – அவிசாவளையில் தம்பதியினர் கைது

by newsteam
0 comments
தங்கம் வாங்குவது போல் நடித்து ரூ.4 இலட்சம் நகை திருட்டு! – அவிசாவளையில் தம்பதியினர் கைது
125

கொழும்பு அவிசாவளை நகரில் நகை கடையொன்றில் தங்கம் வாங்குவது போல் நடித்து சுமார் ரூ.400,000 மதிப்புள்ள நகை பெட்டியை திருடியதாக கூறப்படும் தம்பதியினரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வீட்டில் இடம்பெற்றவுள்ள விழாவொன்றிற்கு தங்க நகை மற்றும் மோதிரம் வாங்க விரும்புவதாகக் கூறி சந்தேகநபர்கள் நேற்று நகை கடைக்கு சென்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதன்போது நகைகளை பரிசோதிப்பது போல் நடித்து, நகைப் பெட்டியை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய பெண் மற்றும் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேகநபர் இதேபோன்ற சம்பவங்களுக்காக நான்கு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக அவிசாவளை நகரில் உள்ள நகை கடையின் உரிமையாளரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version