Home இலங்கை தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்

தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்

0
தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு - மட்டக்களப்பில் சம்பவம்

வீடொன்றில் தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.பிறந்து ஒன்றரை மாதமேயான இந்த குழந்தை கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தாய்ப்பால் அருந்திவிட்டு தாயுடனே உறங்கியுள்ளது.மறுநாள் திங்கட்கிழமை (17) அதிகாலை குழந்தைக்கு பால் புகட்டுவதற்காக தாய் குழந்தையை எழுப்பியபோது குழந்தை சுவாசமின்றி இருந்துள்ளது. அதனையடுத்து, உடனடியாக குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தை முன்னரே இறந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு சென்று மரண விசாரனைகளில் ஈடுபட்டு, குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்தார்.அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாததால், சடலத்தின் உடல்கூறுகள் மேலதிக பரிசோதனைக்காக பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குழந்தையின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version