Home இந்தியா திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி

திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி

0
திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே திருமணம் செய்ய மறுத்த காதலனை தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜெயசூர்யா என்ற இளைஞரும் ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் உடனடியாக திருமணம் செய்து கொள்ள ஜெயசூர்யா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரம்யா, ஜெயசூர்யாவுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி, ஜெயசூர்யா ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.இந்நிலையில், முடிந்தால் உன்னை காப்பாற்றிக்கொள் என வாட்ஸ் அப்பில் காதலி அனுப்பிய மெசேஜை பார்த்து பதறிய ஜெயசூர்யாவின் பெற்றோர் இது தொடர்பாக போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் காதலி ரம்யா, அவரது பெற்றோர் தலைமறைவு ஆகியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version