பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாக தவறியமையினால் அவரை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
இந்தநிலையில், மாலைதீவிலிருந்து இன்று காலை நாடு திரும்பிய அவர், நகர்த்தல் பத்திரமொன்றை முன்வைத்து ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையானார்.அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.