Home இலங்கை நாயை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது

நாயை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது

0
நாயை தூக்கிலிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது

நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பில் வடமாகாண மாங்குளத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாயை தூக்கிலிட்டு கொன்ற சம்பவம் தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அண்மையில் வைரலானதுடன், பலரின் கண்டனத்தையும் பெற்றது.இது தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்கண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.மாங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 48 வயதுடைய பெண் ஒருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு இலக்கம் 13 ஆம் இலக்க விலங்குகளுக்கு வன்கொடுமை செய்வதைத் தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version