Home இலங்கை நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா

0
நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகிழங்காடு பகுதியில் இடம்பெற்றது.கொமர்சல் வங்கியின் ஏற்பாட்டில் குறித்த நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்டமானது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடம் மற்றும் விவசாய திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.குறித்த செயற்திட்டத்தின் அறுவடை நிகழ்வில் கொமர்சல் வங்கியின் பொது முகாமையாளர் டிலக்சன் கெட்டியாராட்சி, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், யாழ் பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர், விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், பொறியியலாளர்கள், யாழ் பல்கலைக்கழக விவசாய பீட மாணவர்கள், விவசாயிகள், வங்கி ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானதுடன், வரவேற்பு நடனமும் இடம் பெற்றது.தொடர்ந்து அறுவடை நிகழ்வு இடம்பெற்றது. பாரம்பரிய முறையில் புதிர் எடுத்து வரப்பட்டு பொங்கலிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.நவீன விவசாய முறையில் இயந்திரங்கள் மூலம் நாற்று நாட்டப்பட்டு, ரோன் மூலம் மருந்து விசிறப்பட்டு நவீன நடுகை விவசாய முறையில் குறித்த செய்கை மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version