Home இலங்கை பருத்தித்துறையில் திலீபன் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞன் கைது

பருத்தித்துறையில் திலீபன் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞன் கைது

0
பருத்தித்துறையில் திலீபன் ஊர்தி முன் பட்டாசு கொளுத்திய இளைஞன் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு ஊர்தி பவனி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதனடிப்படையில், திலீபன் வழியில் வருகிறோம் என்று ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த பவனி, இன்று பிற்பகல் 01:30 மணியளவில் பருத்தித்துறை நகர் பகுதியை வந்தடைந்துள்ளது.தியாக தீபம் தீலீபனிம் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி கடந்த ஒரு வாரகாலமாக தமிழர் தாயக பகுதிகளில் அஞ்சலிக்காக சென்று வருகின்ற நிலையில் பருத்தித்துறை நகர் மக்களின் அஞ்சலிக்காக இன்றையதினம் வருகை தந்திருந்தது.இதன் போது பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சன் டிபோல் டக்ளஸ் போல் மற்றும் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் தியாக தீபம் திலீபனின் திருஉருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.இதன் போது பருத்தித்துறை நகரபகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரால் ஊர்தியின் முன் பகுதியில் பெருந்தொகையான பட்டாசுகளை கொழுத்திய போது பருத்தித்துறை நகர் முழுவதும் பரபரப்பான சூழல் நிலை காணப்பட்டது.அதனை தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை பருத்தித்துறை பொலிசார் கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version