Home இலங்கை புதிய தலைமுறை கழகத்தின் தலைவர் முஷாரப் முயற்சியில் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்- பாடசாலையில் கேட்போர் கூடம் நிறைவு

புதிய தலைமுறை கழகத்தின் தலைவர் முஷாரப் முயற்சியில் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்- பாடசாலையில் கேட்போர் கூடம் நிறைவு

0
புதிய தலைமுறை கழகத்தின் தலைவர் முஷாரப் முயற்சியில் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்- பாடசாலையில் கேட்போர் கூடம் நிறைவு

புதிய தலைமுறை கழகத்தின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் நிதியுதவில் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலைக்கு சுமார் 7 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் வேலைகள் ஆரம்பமானது.இதற்கு ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலையின் பழைய மாணவரும் பெற்றோருமாகிய ஏ.ஏ.அஸாம் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் அவர்களின் அயராத முயற்சியினால் முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜுன் மாதம் 10 ஆந் திகதி கட்டட விஸ்தரிப்புக்கான அடிக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களினால் நடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப் பாடசாலைக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சகுதுல் நஜீம், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குணதிலக்க சிபாரிசினால் முன்னால் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் 5 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில். மேலும் 5 மில்லியன் ரூபா நிதியினை பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் ஏ.ஏ. அஸாம் அவர்களின் சிபாரிசின் பெயரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களினால் மொத்தமாக 7 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு பூரணமாக பாடசாலையின் கேட்போர் கூடம் இன்று நிறைவு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் அதிதியாக பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ், பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சகுதுல் நஜீம் ,
பிரதம அதிதியாக மாவட்ட பொறியியலாளர் ஏ.எம்.சாக்கிர், இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய பிரதம பொறியியலாளரும் பழைய மாணவர் சங்க உப தலைவருமான எம்.ஆர்.எம்.பர்ஹான், சிறப்பு அதிதியாக கல்வி நிர்வாக துணை இயக்குனர் எம்.எச்.எம்.ஜாபீர் , கல்வி வளர்ச்சி துணை இயக்குனர் எம்.எச்.றியாஸா , என்.வரனியா கல்வி திட்டமிடல் ,துணை இயக்குனர் ,ஏ.அஸ்மா மலிக் பிரதேச கல்வி அதிகாரி சாய்ந்தமருது, யூ.எல்.றியாஸ் கல்வி மேலாண்மை துணை இயக்குனர், ஏ.எல்.எம்.ஜகன்கீர்.கல்வி உதவி இயக்குனர் ஆரம்ப பாடசாலை,முன்னால் இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்பின் சாய்ந்தமருது பிரதேச பிரத்தியோக செயலாளர். இப்பாடசாலையின் பழைய மாணவர்.ஏ.ஏ.அஸாம் ,கௌரவ அதிதிகளாக பாடசாலையின் அபிவிருத்திக் குழுவின் செயலாளரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் செயற்றிட்ட பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், உட்பட பிரதி அதிபர்கள், உதவி அதிபர், பகுதித் தலைவர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததோடு எமது பாடசாலை கட்டட நிர்மாண வேலைக்காக மொத்தமாக 12 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்து தந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் ,பாடசாலையின் பழைய மாணவரும் பெற்றோருமாகிய அஸாம் அப்துல் அஸீஸ்க்கு ,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சகுதுல் நஜீம், மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதாவுக்கும் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர், பகுதித் தலைவர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினர்கள், பெற்றோர்கள் நன்றி கூறி நினைவு சின்னம் வழங்கியதோடு பகல் போசனம் உபசரிப்பு பின்னர் மிக அலங்கார கலை நிகழ்சிகள் நடப்பெற்றுடன் பின்னர் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.




NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version