பொகவந்தலாவ பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது சூடான நீர் ஊற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.இந்த முறைப்பாடு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அயலவர் ஒருவர் தனது நாயின் மீது சூடான நீர் ஊற்றியதாக உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.குறித்த பகுதியில் உள்ள கடையொன்றிற்கு முன்னால் நாயொன்று யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்துள்ளது.அந்தக் கடைக்கு அருகிலுள்ள பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் கடையின் உரிமையாளர் அங்கு சென்றுள்ளார்.அதன்போதே உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது வெந்நீரை ஊற்றியதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.வெந்நீரை ஊற்றியதும் நாய், வலியால் அலறிக் கொண்டு ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.இந்நிலையில், வதைக்கப்பட்ட நாய் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.இந்நிலையில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்து சம்பவம் தொடர்பான வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஈவிரக்கமின்றி ஐந்தறிவுடைய மிருக ஜாதிக்கு இவ்வாறான ஒரு செயலை செய்தமைக்கு பலர் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.