Home இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து – உடனடியாக அமுல்

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து – உடனடியாக அமுல்

0
மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து – உடனடியாக அமுல்

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த 21 ஆம் திகதி வௌியானது.1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2 ஆம் உறுப்புரிமையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையெழுத்திடப்பட்டு வௌியிடப்பட்டது.சாதாரண பொது வாழ்க்கையைப் பேணுவதற்கு அவசியமானவை மற்றும் அத்தகைய சேவைகளுக்கு இடையூறு அல்லது தடை ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version