Home இலங்கை முஸ்லிம்கள் மீது சோடிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை தெளிவுபடுத்தும் இரு முக்கிய நூல்கள் இன்று வெளியீடு –...

முஸ்லிம்கள் மீது சோடிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை தெளிவுபடுத்தும் இரு முக்கிய நூல்கள் இன்று வெளியீடு – கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

0
முஸ்லிம்கள் மீது சோடிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை தெளிவுபடுத்தும் இரு முக்கிய நூல்கள் இன்று வெளியீடு - கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்” மற்றும் “உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” ஆகிய இரு முக்கிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று (30) இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம் பெறவுள்ளது. இன்றைய இரண்டு நூல் வெளியீட்டு விழா சிறப்பிக்க தனது வாழ்த்துக்களையும், பிராத்தனைகளையும் தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அவரது வாழ்த்து அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அதில் குறிப்பிடுகையில்,

முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட சந்தேகங்களை தெளிவுடுத்தி மிகவும் ஆக்கபூர்வமானதொரு நூலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம் எழுதிய “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்” நூல் காணப்படுகிறது.அதேபோல், பேராசிரியர் ராஜன் ஹூல் ஆங்கிலத்தில் எழுதிய “SRI LANKA’S EASTER TRAGEDY. When the deep state gets out of its depth” என்ற ஆங்கில நூலை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இது பல உண்மைகளைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் முக்கிய நூலாக காணப்படுகிறது.

இவ்விரு நூல்களும் அண்மை காலத்தில் இலங்கையை உலுக்கிய அதிர்ச்சியான சம்பவங்களையும், அச்சுறுத்தல்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.அயராத வேலைப்பளுக்களுக்கிடையே மேற்கொள்ளப்படும் இவர்களது சமூகத்திற்கான எழுத்துப்பணியையும் வல்ல இறைவன் பொருந்திக்கொள்வானாக, நிகழ்வும் இனிதே சிறப்புடன் நடந்தேறிட மனமார்ந்த, பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.- என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version