Home இந்தியா வரதட்சணை கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்

வரதட்சணை கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்

0
வரதட்சணை கொடுக்காத ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் ரூ.5,000 வரதட்சணை தரமுடியாததால் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உசைன்பூர் கிராமத்தில் கடந்த மாதம் சோயப் அகமது என்ற 25 இளைஞருக்கும் தரன்னும் என்ற 22 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில், கடந்த 6 ஆம் திகதி மாமியாரின் வீட்டிற்கு சென்ற சோயப் அகமது தனக்கு 5,000 ரூபாய் பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் கொடுத்துள்ளார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினரால் அப்பணத்தை கொடுக்க முடியவில்லை.

பின்னர் கோபத்துடன் வீட்டிற்கு சென்ற சோயப் அகமது தனது மனைவியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சோயப் அகமது மற்றும் அவரது தந்தை அனீஸ் அகமதுவை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version