மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.நேற்றையதினம் தங்காலையிலும் இது போன்ற இரசாயன தொகுதி மீட்கப்பட்ட நிலையில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.நுவரெலியாவில் செயற்படும் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைக்காக இந்த இரசாயணங்கள் தொகுதிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.