Home இந்தியா 3ஆம் வகுப்பு சிறுமிக்கு மாரடைப்பு பள்ளியிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்

3ஆம் வகுப்பு சிறுமிக்கு மாரடைப்பு பள்ளியிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்

0
3ஆம் வகுப்பு சிறுமிக்கு மாரடைப்பு பள்ளியிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்

காலை 7:30 மணியளவில் சிறுமி தனது பள்ளிப் பையுடன் தனது வகுப்பை நோக்கி செல்வதைக் காணலாம் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த சிறுமி திடீரென்று வேதனையில் நெளிகிறாள் குஜராத்தில் 8 வயது சிறுமி பள்ளியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று [வெள்ளிக்கிழமை] குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தார். கார்கி ரன்பரா என்ற அந்த சிறுமி, தல்தேஜ் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான Zebar பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வந்தார்.சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், காலை 7:30 மணியளவில் சிறுமி தனது பள்ளிப் பையுடன் தனது வகுப்பை நோக்கி செல்வதைக் காணலாம். அப்போது சிறுமிக்கு திடீரென உடல் அசௌகரியம் ஏற்படுகிறது.அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த சிறுமி திடீரென்று வேதனையில் நெளிகிறாள். அருகில் நின்றிருந்த ஆசிரியர்களும் மற்ற பள்ளிக் குழந்தைகளும் எதையும் புரிந்து கொள்வதற்குள், சிறுமியின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. சேரில் இருந்து சிறுமி சுருண்டு விழுந்தார்.

சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த வார தொடக்கத்தில் கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் சாமராஜநகரில் அமைந்துள்ள பள்ளியில் வகுப்பிலேயே 3 ஆம் வகுப்பு படிக்கும் மற்றொரு 8 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version