Home இந்தியா 3 மாதம் கழிவறை சுத்தம் செய்ய வேண்டும் – காதலர் தினத்தில் தம்பதியின் வினோத ஒப்பந்தம்

3 மாதம் கழிவறை சுத்தம் செய்ய வேண்டும் – காதலர் தினத்தில் தம்பதியின் வினோத ஒப்பந்தம்

0
3 மாதம் கழிவறை சுத்தம் செய்ய வேண்டும் - காதலர் தினத்தில் தம்பதியின் வினோத ஒப்பந்தம்

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுபம் மற்றும் அனையா தம்பதியினர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் இருவரும் நேற்று காதல் தினத்தில் பத்திரத்தில் வினோத ஒப்பந்தம் செய்து கொண்டனர்.அந்த ஒப்பந்தத்தில் மனைவி, கணவர் பின்பற்ற வேண்டியவை குறித்து தெரிவித்துள்ளதாவது சாப்பிடும் போது குடும்ப விஷயங்களை மட்டும் விவாதிக்க வேண்டும்.வர்த்தகம் பற்றி பேசக்கூடாது. இனி என்னை பியூட்டி காயின், கிரிப்டோ பை என அழைப்பதை நிறுத்த வேண்டும். படுக்கை அறையில் பங்குச்சந்தை லாபம் நஷ்டம் பற்றி பேசக்கூடாது.இரவு 9 மணிக்கு பிறகு வர்த்தகம் தொடர்பான செயலி மற்றும் வீடியோக்களை பார்க்க கூடாது. இவ்வாறு மனைவி கூறி இருந்தார்.அதேபோல் கணவரும் மனைவிக்கு சில நிபந்தனைகளை விதித்து இருந்தார். அதில் தனது தாயிடம் தனது நடத்தை குறித்து புகார் செய்வதை நிறுத்த வேண்டும். வாக்குவாதத்தின் போது முன்னாள் காதலி குறித்து பேசக்கூடாது.விலை உயர்ந்த தோல் மற்றும் பராமரிப்பு பொருட்களை வாங்கக்கூடாது. இரவு நேரங்களில் ஆப் மூலம் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்ய கூடாது இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இந்த ஒப்பந்தங்களை மீறினால் 3 மாதங்களுக்கு துணி துவைப்பது, கழிவறையை சுத்தம் செய்வது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து சமையல் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்ய வேண்டும் என ஒப்பந்தத்தில் தெரிவித்து இருந்தனர்.இவர்களின் வேடிக்கையான ஒப்பந்தம் போட்ட பத்திரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version