Home » அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிய தம்பதியர் விபத்தில் சிக்கினர் – கணவன் உயிரிழப்பு

அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிய தம்பதியர் விபத்தில் சிக்கினர் – கணவன் உயிரிழப்பு

by newsteam
0 comments
அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிய தம்பதியர் விபத்தில் சிக்கினர் – கணவன் உயிரிழப்பு
101

கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் நேற்று மாலை முச்சக்கர வண்டியும் சிற்றூந்தும் மோதி விபத்துக்குள்ளானது. கட்டுகஸ்தோட்டை, அலதெனிய பகுதியைச் சேர்ந்த இவர்கள், மைலப்பிட்டியவில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தலாத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தலாத்துஓயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த பெண் விபத்தில் இறந்தவரின் மனைவி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version