Home உலகம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொ ருட்களுக்கும் முழுமையாக வரிவிலக்கு அளிக்க இந்தியா தயார்:...

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொ ருட்களுக்கும் முழுமையாக வரிவிலக்கு அளிக்க இந்தியா தயார்: டிரம்ப்

0
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொ ருட்களுக்கும் முழுமையாக வரிவிலக்கு அளிக்க இந்தியா தயார்: டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது டிரம்ப் சரமாரியாக வரி விதித்தார். அதன்படி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீது 27 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதேவேளை, இந்த கூடுதல் வரி விதிப்பு ஜூலை 9ம் தேதிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கால இடைவேளியில் வரி விதிப்பு தொடர்பாகவும், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகவும் இறுதி முடிவு எடுக்க ஜூலை 9 வரை அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்திய வர்த்தக மந்திரி பியூஷ் கோயல் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவர் அந்நாட்டு வர்த்தக மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.இந்நிலையில், அமெரிக்க செய்தி நிறுவத்திற்கு டொனால்டு டிரம்ப் நேற்று பேட்டியளித்தார். அப்போது, அமெரிக்க பொருட்களுக்கு முழுமையான வரிவிலக்கு அளிக்க இந்தியா தயாராக இருப்பதாக அவர் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, உலகிலேயே மிகவும் அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்வது இயலாத ஒன்று. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் முழுமையாக வரிவிலக்கு அளிக்க இந்தியா தயாராக இருந்தது. இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும். அதில், எனக்கு எந்த அவசரமும் இல்லை. அனைவரும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகின்றனர்’ என்றார்.அதேவேளை, எந்தஒரு வர்த்தக ஒப்பந்தமும் இருநாட்டிற்கும் நன்மையை அளிக்கும் வகையி இருக்கவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version