Home » இந்தியர்களுக்கு எதிரான வன்முறை: கனடா திரையரங்குகளில் இந்திய படங்களை தற்காலிகமாக நிறுத்தம்

இந்தியர்களுக்கு எதிரான வன்முறை: கனடா திரையரங்குகளில் இந்திய படங்களை தற்காலிகமாக நிறுத்தம்

by newsteam
0 comments
இந்தியர்களுக்கு எதிரான வன்முறை: கனடா திரையரங்குகளில் இந்திய படங்களை தற்காலிகமாக நிறுத்தம்
9

கனடாவின் திரையரங்குகள் இந்திய திரைப்படங்களை திரையிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.கனடாவில், இந்தியர்கள் மற்றும் இந்துக்களுக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களை தொடர்ந்து, பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் எச்1பி விசா விண்ணப்ப கட்டண உயர்வால் பாதிக்கப்படும் திறன்மிக்க இந்திய பணியாளர்களை வரவேற்போம் என்று கனடாவின் பிரதமர் மார்க் கார்னி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து, கனடாவின் ஒரு சில தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.இந்தநிலையில், இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்களை அந்த தரப்புக்கள் எழுப்பி வருகின்றனர்.அத்துடன் இந்துக்களின் கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன.அதேநேரம் ஒன்டாரியோ மாகாணத்தில் இந்திய திரைப்படம் திரையிடப்பட்ட ஒரு திரையரங்கு தீ வைப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version