மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை நிர்மாணித்தல் மற்றும் அந்தப் பிரிவுக்கு மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் என்பவற்றுக்காக, 600 மில்லியன் ரூபாய் மானிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தில் நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் கொழும்பில் வைத்துக் கையெழுத்திட்டுள்ளனர்.இந்தத் திட்டம், மருத்துவமனைக்கு இரண்டு மாடி விபத்து மற்றும் அவசர பிரிவின் சிவில் கட்டுமானத்தையும், அலகுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தநிலையில், குறித்த திட்டம், இலங்கையின் சுகாதாரத்துறையில் இந்தியாவின் ஒத்துழைப்பு பட்டியலை நீடித்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.