Home ஜோதிடம் இன்றைய ராசி பலன் – 10-05-2025

இன்றைய ராசி பலன் – 10-05-2025

0
இன்றைய ராசி பலன் 10 மே 2025

இன்றைய ராசிபலன் 10.05.2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 26, சனிக் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள சதயம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் உற்சாகமான சூழல் இருக்கும். பொய்யர்களிடமிருந்து விலகி இருக்கவும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அன்பையும் அனுபவிப்பார்கள். அன்புக்குரியவர்களின் சில கருத்து வருத்தத்தை தருவதாக அமையும். வண்டி, வாகன நன்மை கிடைக்கும். தொழில் சார்ந்த விஷயத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வேலை தொடர்பாக முன்னேற்றம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தெரியாத நபர்களுடன் எந்தவித தொடர்பையும் தவிர்ப்பது நல்லது. திருமணமானவர்கள் வீட்டில் நேர்மறையான பலனை சந்திப்பார்கள். புதிய தொடக்கமும், வருமானமும் கிடைக்கும். அதே சமயம் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நண்பர்களுடன் புதிய தொழில் தொடங்க நினைப்பீர்கள். உங்கள் திறமையால் செயலில் முன்னேற்றம் அடைவீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் தனிப்பட்ட ஆர்வத்தால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் திறமைகளை மேம்படுத்துவதில் மும்முரமாக இருப்பீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். நிதிநிலை சார்ந்த முடிவு எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரம் தொடர்பாக பிறரிடம் சிக்கி உள்ள பணம் திரும்ப கிடைக்கும். வேலைப்பளு நிறைந்ததாக இருக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும் உங்களின் திறமையால் சவால்களைச் சமாளிப்பீர்கள். வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கையில் உள்ளவர்கள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வியாபாரம் தொடர்பாக நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று முக்கிய நாளாக அமையும். ஒருவர் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். அவர் உங்கள் வாழ்க்கைத் துணையாக மாற வாய்ப்பு உண்டு. திருமணமானவர்களுக்கு வேலையில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். காதல் தொடர்பாக இணக்கமான சூழல் இருக்கும். பண முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. வணிகம் முயற்சிகளுக்கு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இன்று பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். வாழ்க்கைத் துணையுடன் உறவில் கவனமும், அக்கறையும் தேவை. உங்களின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் நிதி நன்மைகளை பெற்று தரும். சொந்த தொழில் தொடர்பாக நீங்கள் எந்த வேலை செய்தாலும் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிதமான பலன் கிடைக்கக் கூடிய நாள். உங்களை சுற்றி உள்ளவர்களின் அனுதாபத்தைப் பெறுவீர்கள். காதல் உறவுகள் மேம்படும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வணிகம் தொடர்பாக புதிதாக சில விஷயங்களை செய்ய நினைப்பீர்கள். நீண்ட கால ஒப்பந்தம், சொத்து கிடைக்க வாய்ப்பு உண்டு.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும். அரசியலில் உள்ளவர்கள் அதில் தீவிரமாக பங்கேற்பார்கள். இன்று உங்கள் கருத்துக்களை மிகவும் கவனமாக வெளிப்படுத்துவது நல்லது.புதிய வருமான ஆதாரங்கள் கண்டறிய முயற்சி செய்யவும். உத்தியோகஸ்தர்கள் இலக்குகளை உணர்ந்து திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. இன்று உங்களின் உடல், மன ஆரோக்கிய மேம்பட யோகா, தியானம் செய்யவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆற்றல் அதிகரிக்கும். உங்களின் தலைமைத்துவம், திறமை மேம்படும். பழைய தவறுகளில் இருந்து அனுபவத்தைப் பயன்படுத்துவீர்கள். இன்று உங்களின் காதல் திருமணத்திற்கு நகர வாய்ப்பு உண்டு. திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும். பெரிய பண ஆதாயமும், கடின உழைப்பிற்கான பாராட்டும் கிடைக்கும். வேலையில் விரும்பிய சாதனை படைக்கும் வாய்ப்பு உண்டு.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் யோசனைகள் சிறப்பான பலனை தரும். நல்ல செய்திகள் தேடி வரக்கூடிய நாள். குழந்தைகளின் படிப்பு தொடர்பாக உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமாகவும், பேச்சில் இனிமையும் கடைப்பிடிப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். சிறு வணிகர்களுக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் தொடர்பாக ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் வேலையில் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் சூழல் சாதகமாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக கடினமான சூழல் இருக்கும். இருப்பினும் உங்கள் உழைப்பால் வெற்றி அதிகரிக்கும். இன்று செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் பிரச்சனை தீர குடும்ப உறுப்பினர்கள், மனைவியின் உதவி கிடைக்கும். இன்று உங்கள் வேலையை விட்டு பிறருக்கு உதவ நினைப்பீர்கள். இன்று பிறரின் உணர்வுக்கு மதிப்பளிக்கவும். எந்த தொழிலை செய்பவராக இருந்தாலும் இன்று கடினமான சூழலை எதிர்கால வாய்ப்பு உண்டு.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version