Home » கட்டுநாயக்க விமான நிலையத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளம் வர்த்தகர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளம் வர்த்தகர் கைது

by newsteam
0 comments
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளம் வர்த்தகர் கைது
10

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (17) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி – கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இதன்போது, விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 50,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 250 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version