இங்கிலாந்தை சேர்ந்தவர் மைக்கேல் க்ரீன். இவரது மனைவி ஹெலன். இவர்களுக்கு 6 வயதில் டார்சி என்ற பெண் குழந்தை உள்ளது.மைக்கேல் க்ரீன் தனது குடும்பத்துடன் 10 நாள் சுற்றுப் பயணமாக கனடா சென்றுள்ளார். டோரான்டோவில் தங்கியிருந்தபோது ஹெலனுக்கு சற்று வயிறு வலித்துள்ளது. இதனால் கழிவறைக்கு சென்றுள்ளார். திடீரென வயிற்றில் இருந்து வெளியே ஏதோ ஒன்று தள்ளுவது போன்று உணர்ந்துள்ளார். அப்போது கீழே பார்த்தபோதுதான், அவரது வயற்றில் இருந்து குழந்தை பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.ஹெலன், தான் கர்ப்பிணியாக இருப்பதாக உணர்ந்ததே இல்லையாம். அதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லையாம் எனத் தெரிவித்துள்ளார். இந்த வகையான கர்ப்பத்திற்கு cryptic pregnancy ஆகும். அவருக்கு வழக்கமாக வரக்கூடிய மாதவிடாயில் எந்த மாறுபாடும் ஏற்படவில்லையாம். அப்படி இருந்தும் குழந்தை பிறந்துள்ளது.என்றாலும், தற்போது தங்களது குடும்பத்தில் கூடுதலான ஒரு பெண் குழந்தை இணைந்துள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளனர். இது மிக மிகப்பெரிய ஷாக். இருந்தாலும் லவ்லி சர்ப்பிரைஸ் என ஹெலன் தெரிவித்துள்ளார்.