Home இலங்கை கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் கருணா, பிள்ளையானின் முக்கியஸ்தர் இனிய பாரதி கைது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் கருணா, பிள்ளையானின் முக்கியஸ்தர் இனிய பாரதி கைது

0
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் கருணா, பிள்ளையானின் முக்கியஸ்தர் இனிய பாரதி கைது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.புஷ்பகுமார் எனும் இனிய பாரதி விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் மற்றுமொரு அணியினர் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இனிய பாரதியை கைது செய்துள்ளனர்.குறித்த கைது தொடர்பில் அம்பாறை மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனும் தனது முகப்புத்தகத்தினூடாக உறுதிப்படுத்தி தகவலொன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த தகவலுக்கமைய கோவில் பிரதேசத்திலுள்ள முனியக்காடு பகுதியில் வைத்து வீட்டுக்குள் மறைந்திருந்த வேளை இனிய பாரதி புலனாய்வுப் பிரிவினால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த கைதானது இனிய பாரதியின் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள், இளைஞர், யுவதிகளைக்கடத்தி காணாமலாக்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கலாக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கப்டன் சந்திரநேரு படுகொலை தொடர்பில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version