ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாவும் சிலர் இந்த குற்றக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் சென்று பணம் பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.சில அமைச்சர்கள் அவர்களை ஒவ்வொரு மாதமும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்துள்ளனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்ட போதே இதனைத் தெரிவித்தார்.இந்தோனேசியாவில் சமீபத்தில் கைதான குற்றக் குழு உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.வரி வசூலிப்பது போலவே, சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த குற்றக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் சென்று பணம் பெற்றுள்ளனர். சில அமைச்சர்கள் அவர்களை ஒவ்வொரு மாதமும் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வந்துள்ளனர் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த நபர்கள் நாட்டில் ஒரு பெரிய வலையமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.