அண்மையில் ஜனாதிபதி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டவரும், தேசிய லொத்தர் சபையில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருபவருமான துஷித ஹல்லோலுவ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நாரஹேன்பிட்ட – கிரிமண்டல மாவத்தையில் வைத்து அவரது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.சம்பவத்தில் அங்கிருந்த அவரது வழக்கறிஞரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாக்குதல் நடத்தியவர்கள் வாகனத்திலிருந்து ஆவணங்கள் அடங்கிய கோப்பு ஒன்றையும் எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.