Home » ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகன ஏலத்தில் மூலம் 200 மில்லியன் ரூபா வருமானம்

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகன ஏலத்தில் மூலம் 200 மில்லியன் ரூபா வருமானம்

by newsteam
0 comments
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகன ஏலத்தில் மூலம் 200 மில்லியன் ரூபா வருமானம்
8

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகனங்கள் இன்று (15) ஏலத்தில் விடப்பட்டன.இரண்டாம் கட்ட நடவடிக்கையாக ஏலமிடப்பட்ட 26 வாகனங்களில், 17 வாகனங்கள் இன்று விற்பனையானதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இந்த வாகனங்கள் அனைத்தும் 10 வருட காலத்திற்குள் தயாரிக்கப்பட்டவையாகும்.அரச செலவை குறைத்தல் மற்றும் நிதி மேம்பாட்டை மேற்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தில் இவ்வாறு வாகன ஏலம் இடம்பெற்றது.BMW கார், Ford Everest 2, Hyundai Terracan வாகனம், Land Rover Discovery வாகனம் 2, Mitsubishi Montero வாகனம், Nissan பெற்றோல் ரக வாகனம் 03, Nissan ரக கார் 2, Porsche Cayenne கார், SsangYong Rexton ரக ஜீப் வாகனம் 5, Land Cruiser Sahara ரக வாகனம், V8 வாகனம் 6 மற்றும் Mitsubishi Rosa சொகுசுப் பேருந்து ஆகியவை இன்று ஏலத்தில் விடப்பட்டன.இந்த வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 108 தொழிலதிபர்கள் வருகைதந்ததால் வாகனங்களுக்கான கேள்வியும் அதிகரித்திருந்தது.இன்று நடைபெற்ற வாகன ஏலத்தின் ஊடாக அரசுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version