பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை யக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர். யக்கல பொலிஸ் பிரிவில் நடந்த பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர், மல்வதுஹிரிபிட்டிய – வரபலான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யக்கல பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (14) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் வரபலான பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, திருடப்பட்ட 05 மடிக்கணினிகள் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.யக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்