Home » பெண் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நவம்பர் இறுதிக்குள் பணியில் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

பெண் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நவம்பர் இறுதிக்குள் பணியில் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

by newsteam
0 comments
பெண் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நவம்பர் இறுதிக்குள் பணியில் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
21

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் இவ்வாறு கூறினார்.நவம்பர் மாத இறுதிக்குள் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மெட்ரோ பேருந்து சேவையையும் தொடங்குவோம். பேருந்து டிக்கெட்டுகள் மோசடி செய்யப்படுவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, அட்டை கட்டண முறையை நிறுவ கோரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போதுள்ள பேருந்து டிக்கெட் இயந்திரங்கள் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதிகளுடன் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் வழங்கப்படும். பொது பயணிகள் போக்குவரத்து இன்னும் மோசமான நிலையில் உள்ளது. அதைத் தீர்க்க அனைவரும் உதவுமாறு அமைச்சர் கூறினார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version