Home » முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு எதிராக ரணில் சாட்சி

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு எதிராக ரணில் சாட்சி

by newsteam
0 comments
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு எதிராக ரணில் சாட்சி
7

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.அத்துடன் பல முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களும் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும். குற்றச்சாட்டின் அடிப்படையில், தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் சாட்சிகளாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தவிர, முன்னாள் அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, விஜயதாச ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரொசான் ரணசிங்க ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் தலைவர் ஆனந்த விஜேவிக்ரம உட்பட மருத்துவர்கள் குழுவும், சாட்சியாகப் பெயரிடப்பட்டுள்ளது. முறையற்ற இந்த கொள்வனவின் மூலம் 144.4 மில்லியன் ரூபாய் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தச் சதி செய்ததாகப் பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version