Home » யாழில் பிரபல பாடசாலை ஆசிரியர் நடத்தை சர்ச்சை – பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழில் பிரபல பாடசாலை ஆசிரியர் நடத்தை சர்ச்சை – பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

by newsteam
0 comments
யாழில் பிரபல பாடசாலை ஆசிரியர் நடத்தை சர்ச்சை – பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
82

யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10இல் கல்வி கற்கும் பெண் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்ப்பிக்கும் ஆண் ஆசிரியர் அங்க சேட்டையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாக நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடரபில் தெரிய வருவதாவது,யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக அங்க சேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் சில மாணவிகளின் பெற்றோர் பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையிலும் பாடசாலை நிர்வாகம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.இதன் காரணமாக மாணவிகளுக்கு நடந்த அநீதி தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டு அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version