2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் உள்பட 8 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் தமக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து வந்தார். அவருக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.இந்த நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா கொரினா, இந்த நோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா மக்களுக்கும், எனக்கு தொடர்ந்து உறுதியான ஆதரவை அளித்துவரும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சோடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வெனிசுலா அரசியல்வாதி மரியா கொரினா மச்சோடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு — டிரம்புக்கு அர்ப்பணம்
111