அநுராதபுரத்தில் இருந்து பாடசாலை மாணவர்களை ஹந்தானை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற சாரதி மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் இன்று பிற்பகல் ஹந்தானை பகுதியில் இடம்பெற்றுள்ளது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அநுராதபுரத்தில் இருந்து ஹந்தானை மலைத் தொடரை பார்வையிடச் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கண்டியை நோக்கி திரும்பி வரும் போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.திரும்பி வரும் வழியில் எதிர்த் திசையில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் பேருந்து மோதியுள்ளது இதனால் ஆத்திரமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் பேருந்தின் சாரதி மீது பொல்லுகளால் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.பேருந்தில் பயணித்த பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த போதிலும் அதனை கருத்தி கொள்ளாது தாக்கியுள்ளனர்.தாக்குதலுக்கு இலக்கான பேருந்து சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.