Home » அகில இலங்கை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை விலை 10 ரூபா குறைப்பு முடிவு

அகில இலங்கை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை விலை 10 ரூபா குறைப்பு முடிவு

by newsteam
0 comments
அகில இலங்கை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை விலை 10 ரூபா குறைப்பு முடிவு
68

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டைகளின் விலையை 10 ரூபாவால் குறைக்க முடிவு செய்துள்ளது.பாரிய அளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.அதன்படி, வெள்ளை முட்டை ஒன்று 18 ரூபாவாகவும், பழுப்பு நிற முட்டை ஒன்று 20 ரூபாவாகவும் விற்கப்படும் என்று அவர் கூறினார்.ஆனால், சந்தை நடத்தை பற்றிய புரிதல் இன்றி விலையைக் குறைப்பது ஆபத்தானது என்று அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர எச்சரித்தார்.இதற்கிடையில், நேற்று உலக முட்டை தின நிகழ்ச்சியில் பங்கேற்ற ருஹுனு பல்கலைக்கழக கால்நடை மருத்துவ ஆய்வுகள் துறைத் தலைவர் பேராசிரியர் இந்துனில் பத்திரண, உபரி முட்டை உற்பத்தியை ஏற்றுமதி செய்ய விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version