Home உலகம் அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்

0
அமெரிக்காவில் குடியேற பணக்காரர்களுக்கு வாய்ப்பு: கோல்டு கார்டு திட்டத்தை அறிவித்தார் அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் புது புது அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பி வருகிறது. அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிப்பேன் என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கிடையே, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியும் முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் புதிதாக குடியேறுபவர்களுக்கு புதிய கோல்டு கார்டு திட்டம் ஒன்றை, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இந்த கோல்டு கார்டு புதிதாக குடியேறுபவர்களுக்கு 5 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பு படி ரூ.43 கோடி) விற்கப்படும். இந்த அட்டை கிரீன் கார்டின் பிரீமியமாக இருக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து ஓவல் அலுவலகத்தின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறியதாவது:

இது குடியுரிமை பெறுவதற்கான ஒரு வழியாக இருக்கும். இந்த கோல்டு கார்டு வாங்குவதன் மூலம் பணக்காரர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள். அவர்கள் நிறைய பணம் செலவழித்து, நிறைய வரிகளைச் செலுத்தி, நிறைய பேருக்கு வேலை கொடுப்பார்கள்.கோல்டு கார்டு விற்பனை இரண்டு வாரங்களில் துவங்கும். இதை செய்வது முற்றிலும் சட்டபூர்வமானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version