Home உலகம் ‘நாய்’ என திட்டியதால் விபரீதம் பெண் ஊழியர் தற்கொலை

‘நாய்’ என திட்டியதால் விபரீதம் பெண் ஊழியர் தற்கொலை

0
‘நாய்’ என திட்டியதால் விபரீதம் பெண் ஊழியர் தற்கொலை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாக கொண்டு செயல்படும் டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி (வயது 25) என்ற இளம் பெண், கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார்.முன் அனுமதி இன்றி வாடிக்கையாளரை அவர் சந்தித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவரை, நிறுவனத்தின் தலைவர் மிட்சுரு சகாய் விசாரணைக்கு அழைத்தார். அப்போது அவரை ‘நாய்’ என்ற பொருளில் திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மனம் உடைந்த சடோமி, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் விடுப்பில் சென்றார். அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் தற்கொலைக்கு முயன்றார். அவருடைய பெற்றோர் சடோமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர், சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றார். நீண்ட காலம் கோமா நிலையில் இருந்த அவர், கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.இது தொடர்பாக அவருடைய பெற்றோர், தங்கள் மகளின் இந்த நிலைக்கு காரணம் அவர் வேலை பார்த்த நிறுவனமும், அதன் தலைவர் மிட்சுரு சகாயும்தான் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த டோக்கியோ மாவட்ட கோர்ட்டு, இந்த விவகாரத்தில் சடோமியின் குடும்பத்துக்கு ஜப்பான் நாட்டு பணமான 150 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ரூ.90 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அழகு சாதன உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. மேலும் அதன் தலைவரான மிட்சுரு சகாய், தனது பணியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.இதையடுத்து அவருக்கான இழப்பீடு வழங்கப்பட்டது. மேலும் மிட்சுரு சகாயும் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் சடோமியின் குடும்பத்தினரிடம் அந்த நிறுவனம் மன்னிப்பும் கோரியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version