அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விமானி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படை அறிவித்துள்ளது.அமெரிக்க நேரப்படி, இன்று காலை சுமார் 6:30 மணியளவில், கலிபோர்னியாவின் பிரான்சிஸ்கோ நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் விமானம் விபத்துக்குள்ளானது.விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு விமானி பாராசூட்டின் உதவியுடன் வெளியே குதித்து தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த விமானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விபத்து தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சம்பவ இடத்தில் பற்றி எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் சிரமமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.