இந்தியாவின் அஹமதாபாத் போபால் பகுதியில் செல்லப்பிராணிகள் மீதான அன்பின் காரணமாக, போபாலை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருமணமான ஒன்பது மாதங்களிலேயே விவாகரத்து கோருகின்றனர்.செல்லப்பிராணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அவர்கள் விவாகரத்தை கோருகின்றனர்.கணவரின் நாய் மனைவியின் பூனையைத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் மனைவி தனது செல்லப்பிராணியைப் பிரிக்க மறுத்துள்ளார்.இதனையடுத்து, இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்ப்பதற்கு, மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை மற்றும் குடும்ப முயற்சிகள் வெற்றியளிக்காததால், தம்பதியினர் விவாகரத்து கோரினர்.இதனிடையே இது குறித்த குடும்ப நல ஆலோசகர் ஒருவர் கூறுகையில், இதுபோன்ற வழக்குகள் மனித உறவுகளை விட செல்லப்பிராணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் மக்களின் போக்கை பிரதிபலிக்கின்றன என தெரிவித்துள்ளார்.