இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் தக்சும் பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 05 பிள்ளைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து பிள்ளைகளும் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.