Home இலங்கை அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில்

அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில்

0
அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில்

நாட்டின் பொருளாதாரத்தைச் சரியான பாதையில் வழிநடத்தும் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பாராளுமன்றத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளர்.இந்த வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.நாட்டில் ஏற்றுமதி சார்ந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிர்வாக மற்றும் நிறுவன ரீதியான கட்டமைப்பை இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கள் இணைந்து செயற்படுத்தும் “டிஜிட்டல் பொருளாதார மூலோபாயம் 2030” வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (26) ரம்புக்கன பராக்கிரம மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.டிஜிட்டல் மயமாக்கலை கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்லும் ஆரம்ப கட்டம் கேகாலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதோடு, கேகாலை மாவட்டத்தில் உள்ள 42 பிரிவெனாக்கள் மற்றும் 62 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களும் விநியோகிக்கப்பட்டன.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version