Home ஜோதிடம் இன்றைய ராசி பலன் – 05-08-2025

இன்றைய ராசி பலன் – 05-08-2025

0
இன்றைய ராசி பலன் - 05-08-2025

இன்றைய கிரகங்களின் அடிப்படையில் உருவாகக்கூடிய சந்திராதி யோகம் மற்றும் கலா யோகம் காரணமாக 12 ராசிக்கான பலன்கள் மிகவும் நன்மை தரக்கூடியதாக அமையும். சந்திரன் விருச்சிக, தனுசு ராசியில் இருப்பார். மேஷ ராசியினர் கவனமாக இருக்கவும். மிதுனம், கடகம் உள்ளிட்ட ராசிகளுக்கு 2025 ஆகஸ்ட் 5ம் தேதி அற்புத பலன்கள் கிடைக்கும்.

மேஷ ராசி பலன்

மேஷ ராசிக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் குடும்பத்தினருடன் அன்பு ஆதரவும் அதிகரிக்கும். துணையுடன் இனிமையான உறவை கடைப்பிடிப்பீர்கள். இன்று உங்கள் வேலையை முடிப்பதில் மும்முரமாகச் செயல்படுவீர்கள். இன்று செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. இலக்குகளை அடைவதில் வெற்றி கிடைக்கும்.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசிக்கு இன்று பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். இதிலும் கவனமாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். உங்களை சுற்றி உள்ள சூழல் பிரச்சனை தரக்கூடியதாக இருக்கும். இன்று சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்வது நல்லது. பேச்சு, செயல்பாடுகளில் கவனம் செலுத்தவும். வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் கவனம் செலுத்தவும். உங்கள் தொழிலை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசிக்கு வீட்டில் சுப காரியங்கள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வாழ்க்கையில் உற்சாகம் நிறைந்திருக்கும். புதிய அனுபவங்கள் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதனால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணம் தொடர்பாக எந்த ஒரு பெரிய பிரச்சினையும் இருக்காது. அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். மன அமைதியைப் பேணுவதில் கவனம் செலுத்தவும்.

கடக ராசி பலன்

கடக ராசிக்கு இன்று வெற்றி அதிகரிக்கக் கூடிய நாள். உங்கள் பணியிடத்தில் கவனமாக செயல்பட்டால் போட்டியாளர்களை எளிதாக வெல்ல முடியும். இன்றைய நல்ல விஷயத்திற்கும் எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்க்க முயற்சி எடுப்பீர்கள். கோபப்படாமல் நிதானமாக முடிவு எடுக்கவும். உங்களின் பண பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் விருப்பங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டு. மனதளவில் நிம்மதி கிடைக்கும்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசிக்கு இன்று மிகவும் நல்ல நாளாக அமையும்.. புதிய உறவுகள் கிடைப்பார்கள். உங்களின் மன உறுதியான செயல்பாடுகளால் எதிலும் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. குடும்ப உறுப்பினர்களுக்கு உங்கள் மீது நம்பகத்தன்மை அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் படிப்பு சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சி படிப்புகளில் எதிர்பார்த்த முடிவுகள் பெறுவீர்கள். உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் செல்வ நிலை அதிகரிக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசிக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். அன்றாட வேலைகளில் பல பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். உணவு பழக்க வழக்கங்களில் கவனம் தேவை. இன்று உடற்பயிற்சியைத் தவறாமல் செய்வது நல்லது. உங்கள் மனதில் மகிழ்ச்சியும், திருப்தியும் நிறைந்த நாளாக இருக்கும். வேலை தொடர்பாக மும்முரமாகச் செயல்படுவீர்கள். அது தொடர்பான பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி சேர்ந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியும், வெற்றியும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் வேலியில் பெரிய வெற்றியை பெறலாம். போட்டித் தேர்வுகளில் சாதனை படைப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும். கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். வேலையில் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பு உண்டு. கடினமான சூழல் மாறி முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் இன்று அதிக சவால்களை ஏற்க வாய்ப்பு உண்டு. உங்கள் வேலையை கவனமாக செய்யவும். எந்த ஒரு பிரச்சனையையும் கவனமாக கையாள வேண்டிய நாள். நண்பர்களின் ஆலோசனை கிடைக்கும். இருப்பினும் அதை கண்மூடித்தனமாக அப்படியே செயல்படுத்துவதைத் தவிர்க்கவும். இன்று நிதி சார்ந்த விஷயங்களிலும், முதலீடு தொடர்பாகவும் சிந்தித்து முடிவெடுக்கவும். வேலையில் கடின உழைப்பு தேவைப்படும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது நல்லது. மன அமைதியை காப்பது நல்லது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசிக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். உடல் நலம் மேம்படும். உங்களின் கோபத்தை கட்டுப்படுத்தி செயல் பட்டால் நல்லது. பண பற்றாக்குறை ஏற்படக்கூடிய நாள். இன்று உடல் நலத்தையும், மன அமைதியையும் காக்க வேண்டிய நாள். சரியான ஓய்வு எடுப்பது நல்லது. இன்று உங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கில் நேரத்தை செலவிட நினைப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். இன்று உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

மகர ராசி பலன்

மகர ராசிக்கு சாதகமற்ற நாளாக இருக்கும். இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு பெரிய அளவில் சாதகமாக இருக்கிறது. பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலை தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், செலவுகளை கட்டுப்படுத்துவதும் நல்லது. உங்கள் வேலையில் முன்னேற்றம் இருக்கும். இன்று உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு உண்டு. அவர்களுடன் பயணம் சொல்வீர்கள்.

கும்ப ராசி பலன்

கும்பம் ராசிக்கு இன்று கடினமான உழைப்பு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். உணவில் சிறப்பு கவனம் செலுத்தவும். வேலையில் பொறுமையின், சகிப்புத்தன்மையும் பராமரிப்பது நல்லது. ஆளுமை திறன் மேம்படும். இன்று உங்களின் குறைகளை சரி செய்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. குடும்பத்தின் வருடம் அதிக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிப்பீர்கள்.

மீன ராசி பலன்

மீன ராசிக்கு இன்று பணியிடத்தில் வெற்றி கிடைக்கக்கூடியதாக அமையும். பணம் தொடர்பான விஷயங்களில் நன்மை பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அரசியலில் இருந்து விலகி இருக்கவும். பொழுதுபோக்கு விஷயங்களுக்காக அதிகம் செலவிட வாய்ப்பு உண்டு. திருமண முயற்சியில் உள்ள நபர்களுக்கு எதிர்பார்த்த வரன் அமையும்.இன்று புதிய பணிகளையும் திட்டங்களையும் தொடங்க வாய்ப்பு உண்டு. உணவு மற்றும் உடற்பயிற்சியைத் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. நிதானமான செயல்பாடு நல்லது. உங்கள் இலக்குகளை அடைவதற்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version