Home » இரத்ததான முகாம் ஒன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டது

இரத்ததான முகாம் ஒன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டது

by newsteam
0 comments
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டது
6

மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமானது 60 குருதிக் கொடையாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவு கண்டது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் திரு.சீ.இந்திரகுமார் தலைமையில் இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினரால் குருதி சேகரிப்பு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் , விசேட அதிரடிப் படையினர், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு 60 பேர் குருதிக்கொடை வழங்கினார்கள்.இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள், சரயன்கள், உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி திருமதி தாரணி, பொது சுகாதார பரிசோதகர் ரவீனதாஸ், தாதியர்கள் சுகாதார ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கம் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.








You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version