Home » இலங்கையின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள்திறப்பு -இராணுவத்தினரும் பொலிசாரும் கடமையில் (Video)

இலங்கையின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள்திறப்பு -இராணுவத்தினரும் பொலிசாரும் கடமையில் (Video)

by newsteam
0 comments
இலங்கையின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான சேனநாயக்கா சமுத்திரத்தின் வான்கதவுகள்திறப்பு -இராணுவத்தினரும் பொலிசாரும் கடமையில்
2

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.இதன்படி, 5 வான் கதவுகளை தலா 6 அங்குலம் வீதம் திறக்கவும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் திறப்புகளை 12 அங்குலமாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சேனநாயக்க சமுத்திரத்தைச் சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு அம்பாறை பிரதான வீதியில் மழை அதிகரித்த போது வீதிக்கு மேல் வெள்ள நீர் சிறியதாக பெருக்கெடுத்து ஓடுகின்றன இந்த இடத்தில் கடந்த வருடம் வெள்ளநீர் அதிகரித்ததன் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டுனர்.இக்காலப்பகுதியில் காரைதீவு தொடக்கம் மாவடிப்பள்ளி புதிய பாலம் முதல் காரைதீவு முச்சந்தி வரையிலுள்ள பிரயாணிகள் கடந்த காலங்களில் அவலங்களை எதிர் கொண்டதுடன் மரணங்களும் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மழை அதிகரிக்கும் போது வீதிக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவது மட்டுமன்றி பாம்பு, முதலை,ஆமை போன்ற ஆபத்தான உயிரினங்களின் தொல்லைகளாலும் மக்கள் அல்லல் படுவதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கொட்டும் மழையிலும் பாதுகாப்பு கடமையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.தால் நிலங்களில் வசிக்கின்ற பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல் விடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.குறித்த வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்தமையினால் அண்மையில் ஆறு மத்ரஸா மாணவர்கள் உட்பட எட்டு பேர் நீரில் மூழ்கி மரணமானதும் குறிப்பிடத்தக்கது.மேலும் வடக்கு, கிழக்கு வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வுகூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!
Exit mobile version