ஹோட்டல் நிர்வாகத்தால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கமையவே பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அபா இசை நிழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். இதில் தவறான விமர்சிப்பதற்கு எதுவும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இன்று செவ்வாய்கிழமை (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,சுற்றுலாத்துறை மேம்பாட்டை அடிப்படையாக்க கொண்டே அபா இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ளுமாறு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு ஹோட்டல் நிர்வாகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அந்த அழைப்பிற்கமையவே பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்டோர் அந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இதில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது அநாவசியமானது என்றார்.