Home இலங்கை திகதி மாற்றி விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள்

திகதி மாற்றி விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள்

0
திகதி மாற்றி விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள்

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் திகதி மற்றும் அது தொடர்பான தகவல்களை மாற்றியமைத்து, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பை சந்தைக்கு விநியோகிப்பதற்கு திட்டமிட்டிருந்ததாக வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் நேற்று (25) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அங்கு, இந்தியாவில் பொதி செய்யப்பட்ட 25 கிலோ அரிசி மூடைகளில் உற்பத்தியாளர் குறிப்பிட்டுள்ள உற்பத்தி திகதி ஜனவரி 2022 என பொறிக்கப்பட்டுள்ளதோடு, உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் இருந்து அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர், பொதி தயாரிக்கும் திகதியை ஜூன் 2024 என மாற்றி அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும், அரிசிப் பொதிகளில் அச்சிடப்பட்ட விலை மற்றும் நிறைகள் என்பன மாற்றப்பட்டு கொழும்பு 14 பகுதியிலுள்ள களஞ்சியசாலையில் இரகசியமாக வைக்கப்பட்டு எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இந்தச் சுற்றிவளைப்பின் போது, ​​உற்பத்தித் திகதி மாற்றப்பட்ட 25 கிலோகிராம் அரிசி பொதிகள் 717 நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கைப்பற்றப்பட்டுள்ளன. விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருட்களை கொள்வனவு செய்யும் போது பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், பொதியிடல் குறித்த தகவல்கள் ஏதேனும் மாற்றப்பட்டுள்ளதா என ஆராய்ந்து, அவ்வாறான பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பான தகவல்களை 1977 ஆம் என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.


NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version