கொம்பன்ன வீதி மற்றும் நீதியரசர் அக்பர் மாவத்தையை இணைக்கும் மேம்பாலம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் எஞ்சிய கட்டுமானப் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் முழு திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ. 5,278,081,272.43 என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்ட வர்த்தக நகரமான கொம்பன்ன வீதிய பிரதேசத்தில் அமைந்துள்ள புகையிரதக் கடவையால் நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் விரயமாவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.